சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தாய் கைது; போலீசுக்கு வலை | செய்திகள் | Dinamalar
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தாய் கைது; போலீசுக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2021
23:37

புதுச்சேரி:சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலீஸ்காரரை தேடி வருகின்றனர். உடந்தையாக இருந்ததாக சிறுமியின், 38 வயது தாய் கைது செய்யப்பட்டார்.



புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல், 32. இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் எனும் ஐ.ஆர்.பி., போலீஸ்காரர்.இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பர் குடும்பத்துடன் பழகி வந்தார். நேற்று முன்தினம், நண்பரும், அவரது மனைவியும் வெளியில் சென்றுள்ளனர்.அப்போது வீட்டில் தனியாக இருந்த, நண்பரின் 11 வயது மகளிடம், குமரவேல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.



வீடு திரும்பிய தாயிடம், நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார். அவர் அலட்சியம் செய்ததால் தந்தையிடம் கூறினார்.அதிர்ச்சி அடைந்த அவரது புகாரின்படி, தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர்.போலீஸ்காரர் குமரவேல், சிறுமியின் தாய் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.அதன் காரணமாக, பாலியல் தொந்தரவு குறித்து மகள் கூறியதை கண்டு கொள்ளாதது தெரிந்தது.



இதையடுத்து, சிறுமியிடம் சீண்டலுக்கு உடந்தையாக இருந்ததாக, தாய் கைது செய்யப் பட்டார். போலீஸ்காரர் குமரவேல் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X