ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் பயன்பாடின்றி கழிப்பறை மூடி கிடப்பதால், பயணிகள் அவதிபடுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க, தனுஷ்கோடி கடல் அழகை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் வரும் அரசு பஸ், டூரிஸ்ட் பஸ் உள்ளிட்ட வாகனங்களை ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், இதன் வளாகத்தில் நிறுத்துவார்கள். இங்கிருந்து அரசு டவுன் பஸ், ஆட்டோவில் பயணிகள் செல்வது வழக்கம்.
பயணிகள் இயற்கை உபாதை செல்ல நகராட்சியின் கட்டண கழிப்பறையை பயன்படுத்திய நிலையில், ஊரடங்கினால் மூடினர். தற்போது தளர்வு அறிவித்ததும் ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பயணிகள் வருவதால், மூடியே கிடக்கும் கழிப்பறையால் பயணிகள் அவதிபடுகின்றனர்.
இதனால் திறந்த வெளியில் இயற்கை உபாதை செல்வதால் சுகாதார கேடு ஏற்பட்டும், பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் எழுகிறது. எனவே மூடி கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் சங்கலால் குமாவாட் உத்தரவிட வேண்டும்.