து.மதியழகன்: ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்துள்ளது. கூரை பூச்சு உதிர்ந்து வருகிறது.இதுவரை மின்சார வசதி செய்து தரப்படவில்லை. மழை பெய்தால் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் நனைந்து விடுகிறது. ரேஷன் கடையை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.தொம்மை ஆரோக்கியம்: நொண்டி பெருமாள் ஊரணி சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் ஊரணியை சுற்றி தினந்தோறும் குப்பையை மக்கள் விழிப்புணர்வு இன்றி கொட்டி வருகின்றனர்.பன்றிகள் கூட்டமாக திரிவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. கருவேல மரங்களை அகற்றி கண்மாயை துார்வாரினால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு பயன்உள்ளதாக இருக்கும்.
கே.தேவமணி: 7000 பேருக்கு அதிகமானோர் வசித்துவரும் இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் தேவையாக உள்ளது. அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் இருந்தும் அவ்விடத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா, பொழுதுபோக்கு மைதானம் அமைக்கப்படவில்லை.ஆர்.புஷ்பவள்ளி: வாரத்திற்கு ஒரு முறை காவிரிநீர் வருகிறது. இந்நிலையில் ஐந்து ஏக்கர் கடற்கரைப் பகுதியிலிருந்து குடிநீரை சீராக விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.மரிய இன்பம்: வி.வி.ஆர்., நகரில் குறுகியசந்துகளில் சாலைகள் அமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது.மழை காலங்களில் தெருக்களில்,வீடுகளின் முன் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே விடுபட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்க வேண்டும்.