உறவுக்கார பெண்ணிடம் தகராறு: தட்டி கேட்டவர் குத்திக்கொலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
உறவுக்கார பெண்ணிடம் தகராறு: தட்டி கேட்டவர் குத்திக்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:06

திருப்பூர்:தாராபுரம், தண்ணீர்பந்தலை சேர்ந்தவர் மீனாட்சி, 40. கடந்த, 16ம் தேதி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு மகளுடன் சென்றார். அப்போது, ரோட்டில் நடனமாடி கொண்டிருந்த, மோனீஸ், சதீஷ், சந்துரு, கவின், ரமேஷ் உள்ளிட்டோர், மீனாட்சி மீது விழுவது போல் சென்றனர். இதுகுறித்து மீனாட்சி கேட்ட போது, வாலிபர்கள் வாக்குவாதம் செய்து தகராறு செய்தனர். இதை பார்த்த, உறவினர் சுப்ரமணி, 31 தட்டி கேட்டார்.இதனால், அவரை, வாலிபர்கள் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதனால், கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக, அலங்கியம் போலீசார் பதிவு செய்து, சதீஷ் 18, சந்த்ரு 20 மற்றும் கவின் 18, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X