உரிமம் ரத்து பின்னரும் உற்பத்தி; சிவகாசி பட்டாசு ஆலைக்கு சீல் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
உரிமம் ரத்து பின்னரும் உற்பத்தி; சிவகாசி பட்டாசு ஆலைக்கு சீல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:34

சிவகாசி : சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்னரும் விதிமீறி பட்டாசு தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.



திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்த ராமலட்சுமிக்கு சொந்தமான ஸ்ரீநிதி பயர் ஒர்க்ஸ் செங்கமலபட்டியில் உள்ளது. இந்த ஆலை விதிமீறி இயங்கியதாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு உரிமம் ரத்து செய்பப்பட்டது.இதன் பின்பு உரிமம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் விதிமீறி இயங்கியதாக அக்.2ல் உரிமம் ரத்து செய்யப்பட்டது. உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் கேட்டினை பூட்டியப்படி உள்ளே உற்பத்தி நடந்தது. சென்னை தொழிலாளர் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குனர் ரகுமான் தலைமையில் தனி தாசில்தார் லோகநாதன் ஆலையில் ஆய்வு செய்தனர். உரிமம் ரத்து செய்யப்பட்டபின்பும் பட்டாசு தயாரித்தது தெரியவர ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X