செய்தி சில வரிகளில் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
செய்தி சில வரிகளில்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:34

............பாதுகாப்பு கேட்டு முறையீடுவிருதுநகர்:விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையளர்கள் சங்க செயலாளர் நாராயண பெருமாள்சாமி எஸ்.பி.,மனோகரிடம் அளித்த மனு: மாவட்டத்தில் 118 குவாரிகள் குறித்து சங்கம் மூலமாக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறோம். கனிமவளத்துறை துணை இயக்குனர் சட்டநாதன் சங்கர் அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார். ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார். உயிருக்கும், உடமைகளுக்கும் கேடுகள் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் ,என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து எஸ்.பி.,மனோகர் ஏ.டி.எஸ்.பி.,ஐ விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்...........கட்டடங்கள் திறப்புகாரியாபட்டி: கல்குறிச்சியில் நாமநாதபுரம் தி.மு.க., எம்.பி., நவாஸ்கனி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை, தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தொகுதி நிதியில்அச்சங்குளத்தில் ரூ.15 லட்சம், வட கரையில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை வகித்தார். நவாஸ்கனி எம்.பி., முன்னிலை வகித்தார். கூட்டுறவு இணைப் பதிவாளர் செந்தில்குமார், சார்பதிவாளர் கார்த்திக், பி.டி.ஓ.,கள் ராஜசேகரன், சிவகுமார், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் கலந்து கொண்டனர்...............சிறப்பு மருத்துவ முகாம்அருப்புக்கோட்டை :பாவையம்பட்டி தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர். பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினர். முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், தி.மு.க .,நகர செயலர் மணி கலந்து கொண்டனர்* திருச்சுழி பூமிநாத சுவாமி கோயில் வளாகம் முன்பு நீட்டிக்கப்பட்ட பஸ் வழி தடங்களை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். கலெக்டர் மேகநாத ரெட்டி, மருத்துவ பணி இணை இயக்குநர் மனோகரன், திருச்சுழி ஒன்றிய தலைவர் பொன்னு தம்பி கலந்து கொண்டனர்..........ஒரு நாள் பயிற்சி பட்டறை
விருதுநகர்:வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி ஆங்கிலம், தமிழ்த்துறைகள் இணைந்து 'அகராதியியல் எனும் பொருண்மையியல்' எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்தினர். உதவி பேராசிரியர் கனிமொழி வரவேற்றார். முதல் அமர்வில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் கமலா ஏஞ்சல், இரண்டாம் அமர்வில் துறை சென்னை பிரெசிடென்ஸி கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் முருகன் பேசினர். மாணவிகளுக்கு குறுக்கெழுத்து போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவி சொர்ணகாந்தி நன்றி கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X