ராஜபாளையம் : ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் ராமசுப்பு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.