அறிவிப்பில்லா வினியோகத்தால் வீணாகும் குடிநீர்; இதற்கோர்தீர்வு காணுங்க | விருதுநகர் செய்திகள் | Dinamalar
அறிவிப்பில்லா வினியோகத்தால் வீணாகும் குடிநீர்; இதற்கோர்தீர்வு காணுங்க
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:43

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் அறிவிப்பில்லாமல் குடிநீர் சப்ளை செய்வதோடு, நள்ளிரவிலும் விநியோகம் செய்வதால் யாருக்கும் பயன்படாது குடிநீர் வீணாகும் அவலம் தொடர்கிறது. இதை முறைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய அறிவுரை வழங்க வேண்டும்.



மாவட்டத்தில் நகராட்சி , பேரூராட்சி ,ஊராட்சிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பல கி.மீ., துாரத்தில் உள்ள தாமிரபரணி குடிநீர் மூலமும் குடிநீர் விநியோகம் நடக்கிறது. குடிநீருக்காக உள்ளாட்சிகள் லட்சக் கணக்கான ரூபாயை ஒவ்வொரு மாதமும் குடிநீர் வாரியத்திற்கு செலுத்துகிறது. குடிநீர் விநியோகமோ சுழற்சி முறையில் 3 ,10 நாட்களுக்கு 1 முறை என நடக்கிறது. இந்த நீர் எந்த நாளில் எந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வரும் என மக்களுக்கு தெரிவதில்லை.



நள்ளிரவு ,அதிகாலை என விநியோகம் செய்வதால் பலரும் குடிநீரை பெற முடியாமல் போகிறது. இது போன்ற முறையற்ற குடிநீர் சப்ளையால் குழாய்களில் நள்ளி இல்லாமல் குடிநீரானது வீணாகி சாக்கடையில் ஓடுகிறது. பல பகுதிகளில் இது இன்றும் தொடர்கிறது. வீட்டு இணைப்பு பெற்றவர்களும் குழாய்களை மூடாது திறந்து வைப்பதாலும் குடிநீர் வீணாகிறது. உள்ளாட்சிகள் குடிநீர் வரும் நாள், நேரம், எந்த பகுதியில் விநியோகம் என்பதை கூறுவதில்லை .



நினைத்த நேரத்தில் குடிநீரை திறந்து விடுவதாலும் குடிநீர் வீணாகிறது. இதை தவிர்க்க குடிநீர் வரும் நாள், நேரத்தை அறிவிக்க உள்ளாட்சிகள் முன் வரவேண்டும்.இதை முறையாக கடைப்பிடித்தாலே குடிநீர் வீணாவதை தடுக்க முடியும்.குடிநீர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்........



விநியோகித்தும் பயன் இல்லை



உள்ளாட்சிகள் அட்டவனைப்படி சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். பகல் பொழுதில் காலை , மாலை நேரத்தில் விநியோகம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நள்ளிரவில் விடப்படும் குடிநீரை பிடிக்க முடியாது வீணாகிறது. பலரது வீட்டின் குழாய்களின் நள்ளி திறந்தே கிடப்பதால் குடிநீர் விநியோகம் செய்தும் பயன் இல்லாமல் போகிறது.கனகராஜ், சமூக ஆர்வலர்,அருப்புக்கோட்டை............

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X