விலை உயரும் கட்டுமான பொருட்கள்; பரிதவிப்பில் பொதுமக்கள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
விலை உயரும் கட்டுமான பொருட்கள்; பரிதவிப்பில் பொதுமக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:44

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பொறியாளர்கள், பிளம்பர்கள், மக்கள் பரிதவிக்கின்றனர்.



மூன்று மாதங்களுக்கு முன்பு சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது பிளம்பிங் தொழிலுக்கு தேவையான குழாய்கள், பைப்புகள், மின்சாதன பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன. இக்கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பல இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் பணிகளை பாதியிலே கைவிடுகின்றனர்.



இரண்டு மாதமாக தொடர்ந்து விலையேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ரூ.50க்கு விற்கப்பட்ட ஒயரிங் பைப்புகள் ரூ.80, ரூ.350க்கு விற்கப்பட்ட குடிநீர் பைப்புகள் ரூ.500க்கு விற்கப்படுகின்றன. இதே போல் சிமென்ட் விலையும் எகிறி உள்ளது. மின்சாதன பொருட்களான ஒயர் காயல் ரூ.730க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.930 , ரூ.1050க்கு விற்ற ஒயர் காயல் ரூ.1340க்கு விற்கப்படுகிறது.



இந்த விலை உயர்வால் வீடு கட்டுவது பலருக்கு கனவாகவே இருக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. கட்டுமான தொழிலை சார்ந்துள்ள கொத்தனார்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரிஷியன், மிகுந்த தொழில் பாதிப்பை சந்தித்துள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X