மின் கம்பங்கள் இருக்கு... விளக்குகள் இல்லை; விருதுநகர் சர்வீஸ் ரோட்டில் பதட்டத்துடன் பயணிக்கும் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:44

விருதுநகர் : விருதுநகர் நுழையும் சர்வீஸ் ரோட்டில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் வழிப்பறி, மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களால், பதட்டத்துடன் மக்கள் பயணிக்கும் நிலையில், நகராட்சி நிர்வாகம் தனது அசட்டை போக்கை தவிர்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



விருதுநகர் நுழைவுப்பகுதியான தினமலர் நகர், கணேஷ் நகரை யொட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு அமைந்துள்ளது. இந்த ரோடு மூலம் தான் விருதுநகருக்குள் பஸ், கார், டூவீலர்கள் நுழைகின்றன. முக்கியமான சர்வீஸ் ரோட்டில் போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லை. இரவில் இருளில் முழ்கி காணப்படும் சர்வீஸ் ரோட்டில் பெண்கள் நடமாட அச்சப்படும் நிலை உள்ளது. ஹெல்மெட்டிற்கு பிடிக்கும் போலீசார் அருகில் காலி நிலங்களில் மது அருந்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்துவதில்லை.



இரவில் ஆள்நடமாட்டமில்லாத சர்வீஸ் ரோட்டில் இருள் சூழ்ந்திருக்கும் போது ரோந்தும் வருவதில்லை. நான்குவழிச்சாலையிலிருந்து சர்வீஸ்ரோடு நுழைவுப்பகுதியில் வேகமாக வரும் பஸ்கள், டூவீலர்கள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. மதுரை ரோட்டை அடையும் வரை டீ கடைகள், வாகன வெளிச்சத்தை வைத்து தான் மக்கள் செல்லும் நிலை உள்ளது. இந்த ரோட்டில் போதிய மின் கம்பங்கள் இருந்தும் ,விளக்கும் அமைப்பதில் என்னவோ நகராட்சி நிர்வாகம் அசட்டையாக உள்ளது. இனியாவது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகரின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த முன் வர வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X