செய்தி சில வரிகளில் .. | விருதுநகர் செய்திகள் | Dinamalar
செய்தி சில வரிகளில் ..
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:46

விஷவாயு தாக்கி பலி



சாத்துார் : மேலக்காந்திநகரில் சாக்கடையில் இறந்து கிடந்த நகராட்சி ஒப்பந்த பணியாளர் சுப்பிரமணியன் 27, விஷவாயு தாக்கி பலியானதாக கூறி, அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி ,வனவிலங்கு கட்சி நிறுவனர் இரணியன் , நாம் தமிழர் கட்சியினருடன் வடக்குரதவீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர் .போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து ரோடுமறியல் செய்தனர். டி.எஸ்.பி.,நாகராஜன், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த கலைந்து சென்றனர்.............



தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு



ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்ட பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் குருசாமி வரவேற்றார். மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் சரவணதுரைராஜா, ஊடகப்பிரிவு செயலாளர் முருகன் பேசினர்.மாவட்ட தலைவராக சமுத்திரம், துணைத் தலைவர்களாக முனியசாமி, கதிரேசன்,செயலாளராக பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர்களாக ராஜேந்திரன், சந்திரன், பொருளாளராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்..........



நகராட்சிக்கு பாராட்டு



விருதுநகர்: நகரமைப்பு இணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நகராட்சிக்குட்பட்ட பணிகளில் நடக்கும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு செய்தார். குப்பை பாயின்ட்கள் இல்லாதது குறித்து நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால், சுகாதார அலுவலர்களை பாராட்டினார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X