போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:48

கார் விபத்தில் 4 பேர் காயம்



காரியாபட்டி: நாமக்கல் மாவட்டம் சின்னிசோளியன்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் 33, குடும்பத்தினருடன் ஆம்னி காரில் திருச்செந்தூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினார். காரியாபட்டி கல்குறிச்சி அருகே வந்தபோது கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. பூங்கோதை, திலகவதி, லோகநாதன், சிவகுமாருக்கு காயங்கள் ஏற்பட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.



8 ஐ சில்மிஷம் செய்த 43 கைது



சிவகாசி: புதுத்தெருவை சேர்ந்த 8 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார் . அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் 43 , சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் ஆறுமுகத்தை கைது செய்தனர்.



மண் அள்ளிய மூவர் கைது



காரியாபட்டி: பிசிண்டியில் வி.ஏ.ஓ., ரஞ்சித்குமார், உதவியாளர் மகேந்திரனுடன் ரோந்து சென்றனர். கிராவல் மண் அள்ளியது தெரிய வர காரியாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் மண் அள்ளும் இயந்திரம் டிரைவர் வீரமணி, உரிமையாளர் பழனி, திருமலையை கைது செய்தனர்.



தி.மு.க., கம்பத்தில் துாக்கிட்டு தற்கொலை



தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சோலைசேரியை சேர்ந்தவர் மாரியப்பன் 85. இரு மகன்கள் உள்ளனர். இவர் கோயில் அருகே உள்ள தி.மு.க., கொடி கம்பத்தில் துண்டை கட்டி தற்கொலை செய்துகொண்டார். சேத்துார் ஊரக போலீசார் விசாரித்தனர்.



டூவீலர்கள் மோதல்; பலி 1



சாத்துார்: பாரதி நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் 48 .மெடிக்கல் ஸ்டோர் வைத்துள்ளார். டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சிவகாசி ரோட்டில் சென்றபோது, மேட்டமலை ஆறுமுகம் 31, மனைவி அபிநயா 24, மகன் கவின் 2, ஆகியோருடன் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) எதிரே வந்தார். டூவீலர்கள் மோதியதில் வெங்கடேஸ்வரன் இறந்தார்.மற்ற மூவரும் காயமடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.



துாங்கிய பெண் வெட்டிக் கொலை



விருதுநகர்: கோவிந்தநல்லுாரை சேர்ந்த மாரியம்மாள் 58,மகன் ஜெகதீசன் . இவரது அலைபேசியிலிருந்து அதே பகுதி விஜயக்குமாரின் மனைவி சென்னலா , ராஜபாளையத்தில் உள்ள தனது அம்மாவுடன் பேசி உள்ளார். இதை கணவர் விஜயக்குமார் சந்தேகித்தார். இதனால் ஜெகதீசன்,விஜயக்குமார் குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. விஜயக்குமாரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதன் விரோதத்தில் நள்ளிரவில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த ஜெகதீசன் தாய் மாரியம்மாளை, விஜயக்குமார் வெட்டி கொன்றார். வச்சக்காரபட்டி போலீசார் கைது செய்தனர்.



மதுபாட்டில்கள் பறிமுதல்



விருதுநகர்: துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் ராமானுஜம் 55. ஆவடையாபுரம் ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் வெளிப்புறம் மதுபாட்டில்கள் விற்று கொண்டிருந்தார். அவரை கைது செய்த வச்சக்காரபட்டி எஸ்.ஐ., கணேஷ்குமார், 184 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.



மதுவால் தற்கொலை



சாத்துார்: மேட்டமலை வடக்குத்தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மணிவண்ணன் 32. நேற்று முன் தினம் மது போதையில் வீட்டிற்கு வந்தவர் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X