சிவகாசி டிராபிக் கன்ட்ரோலுக்கு கூடுதல் போலீசார் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
சிவகாசி டிராபிக் கன்ட்ரோலுக்கு கூடுதல் போலீசார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:49

சிவகாசி : தீபாவளிக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு வாங்குவதற்காக வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.



பெரும்பாலான ரோடுகளில் ஆக்கிரமிப்பு இருப்பதால் பொதுவாகவே இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம். இதை கட்டுப்படுத்த கூடுதலாக 24 டிராபிக் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கூடுதலாக 10 பட்டாலியன் போலீசாரும் பணியில் உள்ளனர். அனைவரும் முக்கிய சந்திப்புகள், போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் பணியில் உள்ளதால், நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு வருகிறது.



பாபு பிரசாந்த் டி.எஸ்.பி.,: தீபாவளி நெருங்குவதால் நகரில் அதிகளவிலான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக எஸ்.பி., ஆலோசனைபடி ராஜபாளையம் சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், திருத்தங்கலிலிருந்து கூடுதல் டிராபிக் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பட்டாசு வாங்க வரும் வெளி மாநிலம், பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.



நகரில் கூட்டம் அதிகமான இடங்களில் வருவோர் அதிக விலையுள்ள நகைகளை அணிந்து வர வேண்டாம், பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி வரையிலும் இதே நிலை தொடரும், என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X