மீண்டும் பணி வாய்ப்பு கோரி சுய விவரம் சமர்ப்பித்த எம்.என்.பி., | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மீண்டும் பணி வாய்ப்பு கோரி சுய விவரம் சமர்ப்பித்த எம்.என்.பி.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
01:07

திருப்பூர்:தி.மு.க.,வின் முந்தைய ஆட்சியில், நுாறு நாள் வேலைகளை கண்காணிக்க, மக்கள் நலப்பணியாளர் நியமிக்கப்பட்டனர்.அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் நலப்பணியாளர் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்துள்ளதால், தங்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென, மக்கள் நலப்பணியாளர் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், பணியில் இருந்த மக்கள் நல பணியாளர் விவரத்தை சேகரித்து அனுப்பி வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில், ஒன்றியம் வாரியாக, விவரம் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், அதிகாரிகள் விவரங்களை நேற்று சேகரித்தனர்.பணியாளர் அதிர்ச்சிதிருப்பூர் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகள் இருந்தன; அவற்றில், எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.இருப்பினும், ஆண்டிபாளையம், முருகம்பாளையம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, மண்ணரை, தொட்டிபாளையம், செட்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகளில் பணியாற்றிவர்களும், நேற்று, தங்களது விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X