கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கி மீனவர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2021
01:20

புதுக்கோட்டை:கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 120 விசைப்படகுகளில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். ராஜ்கிரண் 30, சுகந்தன் 23, சேவியர் 32, ஆகிய மீனவர்கள் நேற்று அதிகாலையில் இந்திய எல்லை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.



அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி மீனவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது ரோந்து கப்பல் மோதியதில் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது.இதில் ராஜ்கிரண் மாயமாகி விட்டார். கடலில் தத்தளித்த மற்ற இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.



ராஜ்கிரணை இலங்கை கடற்படையினர் சடலமாக மீட்டனர்.மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையை கண்டித்து நேற்று கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X