டிரைவர்... பஸ்சுல திருடன் ஒளிஞ்சிருக்கான் வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2021
01:44

கோவை:பஸ்சில் தப்பிய கொள்ளையனை, நுாதன முறையில் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.கோவை அருகேயுள்ள நீலாம்பூரிலுள்ள அபார்ட்மென்டில் வசித்து வருபவர்சித்திக்,31. அவினாசி ரோடு, சிட்ராவில் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.கடையில் பொருத்தப்பட்டிருந்த'சிசிடிவி கேமரா'வில் பதிவான காட்சிகளை,தனது மொபைல் போனில், நேற்று அதிகாலை கண்காணித்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்த காட்சி தெரியவந்தது.உடனே அவரது குடியிருப்பில் வசிக்கும் நண்பர் வில்சன் என்பவரை அழைத்துக்கொண்டு, கடைக்கு விரைந்தார்.அந்தமர்ம நபர், கடையிலிருந்து வெளியே வந்து அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறினார். சித்திக், வில்சன் ஆகியோரும் அதே பஸ்சில் ஏறி, டிரைவரிடம் விவரத்தை கூறினர்.'பஸ்சை பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லுமாறும், இடையில் எங்கும் நிறுத்த வேண்டாம்' என்றும் கேட்டுக்கொண்டனர்.அவர்கள் கூறியபடி, ஸ்டேஷனுக்குள் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசாமி, பஸ்சிலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற போது, சித்திக், வில்சன் ஆகியோர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரிக்கையில், கடையில் கொள்ளையடிக்க முயற்சித்தது, கணபதி மாநகர், பாரதி நகரை சேர்ந்த சரவணன்,59,என்றும், ஏற்கனவே சரவணம்பட்டி பகுதியில் எட்டு கொள்ளை வழக்கில், கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்ததும் தெரிய வந்தது.சரவணம்பட்டி போலீசார், சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி, உளி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கொள்ளையனை சிக்க வைத்த இளைஞர்களை, போலீசார் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X