பூட்டியே கிடக்கும் பூங்காக்கள் பல்லாவரம் மக்கள் கொதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 அக்
2021
04:39
பதிவு செய்த நாள்
அக் 20,2021 04:09

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கும் பூங்காக்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாதது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



பூங்காக்களை திறக்காதது ஏன் என, நலச்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல்லாவரம் நகராட்சியில், 47 பூங்காக்கள் உள்ளன. பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த இப்பூங்காக்களை, ஒரு வருடமாக, கண்டுக்கொள்ளவில்லை.பராமரிப்பு என்ற பெயரில், மாதந்தோறும், பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்படுவதாக எழுந்த. புகாரை அடுத்து, பராமரிப்பு பணியை மேற்கொண்டு வந்த நிறுவனத்திற்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.



பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இதனால், அனைத்து பூங்காக்களையும் பூட்டி மூடிவிட்டனர். சில இடங்களில் மட்டும், அப்பகுதி மக்கள் பூங்காக்களை திறந்து பயன்படுத்திவிட்டு, மீண்டும் பூட்டி செல்கின்றனர். பல இடங்களில், பூட்டு போட்டு மூடிய நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, சுபம் நகரில் உள்ள மூன்று பூங்காக்களும், பல நாட்களாக பூட்டியே வைத்துள்ளனர்.இதன் காரணமாக, முதியோர் மற்றும் பெண்கள் நடைப்பயிற்சி செய்ய முடியாமலும், குழந்தைகள் விளையாட முடியாமலும் தவிக்கின்றனர்.



எனவே, நகராட்சி நிர்வாகம், பூங்காக்களை நேரடி கட்டுப்பாட்டில் பராமரித்து, தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறங்களிலேயே, பூங்காக்கள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், பல்லாவரத்தில் மட்டும் பூங்காக்கள் பூட்டியே கிடப்பது ஏன் என, நலச்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜி.பாகுபலி - Chennai,இந்தியா
20-அக்-202113:26:34 IST Report Abuse
ஜி.பாகுபலி தமிழகத்தில் பல இரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன மத்திய அரசுக்கு நமது எம்பிக்கள் வலியுறுத்துவதே இல்லை என்பது வருந்ததக்க செய்தி முக்கியமாக திண்டிவனம் டூ நகரி ,திருவண்ணாமலை சென்னை டூ கடலூர் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம்
Rate this:
Cancel
ஜி.பாகுபலி - Chennai,இந்தியா
20-அக்-202113:21:49 IST Report Abuse
ஜி.பாகுபலி நமது தமிழ்நாட்டில் எந்த திட்டமும் விரைவாக முடிப்பதில் லை உதாரணமாக பீச்யிலிருந்து பரங்கிமலை பறக்கும் ரயில் மதுரவாயில் டூ துறைமுகம் சாலை சென்னையில் பல சாலைகள் அகலப்படுத்த 20 ஆண்டுகளாக அகலப்படுத்த படும் என அரசியல் வாதிகள் கூறிகொண்டே சென்றுவிட்டனர் இதுதான் உண்மை
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-அக்-202110:33:19 IST Report Abuse
duruvasar உள்ளே மக்கள் பணி நடந்துகொண்டிருக்கும். மக்கள் பயன்பாட்டிற்க்கு இதைவிட பெரியதாக 500 கோடி ரூபாய் செலவில் கருணாநிதி நினைவு பூங்கா அமைக்கும் அறிவிப்பு பல்லாவரம் நகராட்சி தேர்தலுக்கு முன்பு எதிர்பார்க்கலாம்.பல்லாவரத்திற்க்கும் திமுக தலைவர்களுக்கும் ஒரு பந்தம் உண்டு.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20-அக்-202117:33:14 IST Report Abuse
Bhaskaranமக்கள் பணியா அப்படீன்னா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X