வளசரவாக்கம் - விருகம்பாக்கம் இணைப்பு சாலை படுமோசம் | சென்னை செய்திகள் | Dinamalar
வளசரவாக்கம் - விருகம்பாக்கம் இணைப்பு சாலை படுமோசம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
04:29

விருகம்பாக்கம் : குண்டும், குழியுமாக மாறியுள்ள இணைப்பு சாலையை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம், 128 வது வார்டில், ஏ.வி.எம்., அவென்யூ, 2 வது தெரு அமைந்துள்ளது.



இது, வளசரவாக்கம் -- விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது.வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நெரிசலை தவிர்க்க, இந்த இணைப்பு சாலையை பயன்படுத்துகின்றனர்.இச்சாலை, வளசரவாக்கம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது.



இங்குள்ள மழைநீர் வடிகால் உடைந்து, ஆபத்தான நிலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.தார் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த மழையில், சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X