நீர்நிலையில் உயர்மட்ட பால பணி முடிவு உபரி நீர் திறந்தாலும் பாதிப்பு இருக்காது | சென்னை செய்திகள் | Dinamalar
நீர்நிலையில் உயர்மட்ட பால பணி முடிவு உபரி நீர் திறந்தாலும் பாதிப்பு இருக்காது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
04:30

மணலி : புழல் உபரி கால்வாயை கடக்கும் வகையில், மூன்று இடங்களில் கட்டப்படும் உயர்மட்ட பாலங்களின் கட்டுமான பணிகள், நீர்நிலைகளில் முழுதும் முடிந்திருப்பதால், உபரி நீர் திறந்தாலும் பாதிப்பிருக்காது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர் கதைசென்னைக்கு குடிநீர் ஆதரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில், 2.786 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கவிருக்கும் நிலையில், அதிக மழை பொழிவு இருந்தால் ஏரி நிரம்பி, உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.திறக்கப்படும் உபரி நீரானது காவாங்கரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல் தரைப்பாலம், எஸ்.ஆர்.எப்., சந்திப்பு, பர்மா நகர் இரும்பு பாலம், சடையங்குப்பம் மேம்பாலம், எண்ணுார் வழியாக முகத்துவாரத்தில் சென்று கலக்கும்.கடந்த 2015ம் ஆண்டு, வரலாறு காணாத கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில், புழல் உபரி கால்வாயில் வெள்ள நீர் ஆர்ப்பரித்தது.

அப்போது, உபரி கால்வாயை கடக்கும் விதமாக இருந்த வடபெரும்பாக்கம் பாலம், ஆமுல்லைவாயல் தரைப்பாலம், பர்மா நகர் இரும்பு பாலம் ஆகியவை முற்றிலும் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப் பட்டது.இதனால், மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.பின், உபரிநீரில் பாலங்கள் மூழ்குவது தொடர் கதையாக உள்ளது. எனவே, புதிய பாலங்கள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.ரூ.44.25 கோடிஇதற்கு தீர்வாக, 2018ம் ஆண்டு, உள்ளாட்சி மானியக் கோரிக்கையின் போது, உபரி கால்வாயை கடக்கும் விதமாக மூன்று பாலங்களுக்கு பதிலாக, 44.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.ஜூலை 2019ல், மாநகராட்சியின் மேம்பாலங்கள் துறை சார்பில், உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்கி நடக்கிறது. திட்டகாலம் 15 மாதங்கள் என்ற நிலையில், மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணிகளில் தாமதம் ஏற்பட்டு, தற்போது 75 சதவீத பணிகள் முடிந்துள்ளன.குறிப்பாக, மூன்று பாலங்களின் நீர்நிலை கட்டுமான பணிகள், முழுதும் முடிந்திருக்கும் நிலையில், தரைப் பகுதியில் மட்டுமே கட்டுமான பணிகள் பாக்கிஉள்ளன.அதன்படி, பர்மா நகர் மற்றும் ஆமுல்லைவாயல் உயர்மட்ட பாலங்கள், டிசம்பருக்குள் முடியும் என கூறப்படுகிறது. வடபெரும்பாக்கம் உயர் மட்ட பாலம், நில ஆர்ஜித பணியால், சற்று தாமதமாகும்.பருவ மழை நெருங்கும் நிலையில், புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்தாலும், பால கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. காரணம், ஆழமான அஸ்திவாரம் போடப்பட்டு துாண்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.தவிர, கட்டுமான பணிகளால், உபரி நீர் செல்வதில் எந்த இடையூறும் இருக்காத வகையில், உபரி கால்வாயில் இருந்த கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு விட்டன. எனவே, உபரி நீர் செல்வதில் பாதிப்பு இருக்காது என தெரிகிறது.பர்மா நகர், ஆமுல்லைவாயல் உயர்மட்ட பால பணிகள் டிசம்பரிலும், வடபெரும்பாக்கம் உயர்மட்ட மேம்பாலம் ஜனவரி மாதத்திற்குள்ளும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.உபரி நீர் செல்ல, கட்டுமான பணிகள் தடையாக இருக்காது. அதே நேரத்தில், உபரி நீர் ஆர்ப்பரிக்கும் போது மேம்பாலக் கட்டுமானத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.

அவசரத்திற்கு, மேம்பாலத்தில் தற்காலிகமாக படிக்கட்டுகள் அமைத்தும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணிகள் ஏறக்குறைய முடிந்துள்ளன. மழையை பொறுத்து, பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும்.விரைவில், உயர்மட்ட பால பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.மாநகராட்சி மேம்பாலங்கள் துறைஅதிகாரிமேம்பாலம் விபரம்பர்மா நகர்உயரம் : 15 அடிஅகலம் : 39 அடி நீளம் : 328 அடி ஆமுல்லைவாயல்உயரம் : 15 அடிஅகலம் : 41 அடி நீளம் : 356 அடி வடபெரும்பாக்கம்உயரம் : 15 அடிஅகலம் : 46 அடி நீளம் : 295 அடி மேம்பால விபரம் பர்மா நகர் ஆமுல்லைவாயல் வடபெரும்பாக்கம்உயரம் : 15 அடி 15 அடி 15 அடிஅகலம் : 39 அடி 41 அடி 46 அடிநீளம் : 328 அடி 356 அடி 295 அடி

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X