புதுச்சேரி : கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை எபிடிவிடி டெக்னாலஜி நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் முகாமை துவக்கி வைத்தார்.நிறுவன இயக்குனர் சங்கர் தண்டபாணி, மனிதவள துறை மேலாளர் கோமதி மற்றும் குழுவினர், அந்நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறினர்.
எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பொறியியல் கல்லுாரிகளில் 2020, 2021ம் ஆண்டுகளில் பட்டம் பெற்ற நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்தார். அனைத்து துறைகளின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.