தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
05:07

கடலுார் : ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வட்டார மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் நிலையில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி பதவி உயர்வு அளிக்க வேண்டும. கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஊரக வளர்ச்சி துறை பணியாளருக்கு அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



சங்க ஒன்றிய கவுரவ தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அய்யனார், பொருளாளர் சங்கர், தூய்மை பணியாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவநாதன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் வேலவன், ஒன்றிய செயலாளர் திருவேங்கடம் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தூய்மை பணியாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜெயந்தி, ஒன்றிய துணைத்தலைவர் அன்பரசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வேங்கடகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X