தரமான சான்று மணிலா விதைகள் | செய்திகள் | Dinamalar
தரமான சான்று மணிலா விதைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
05:11

புதுச்சேரி : ஐப்பசி மற்றும் கார்த்திகை பட்டங்களுக்கு தேவையான மணிலா விதைகளை உழவர் உதவியகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.



பாசிக் மேலாண் இயக்குனர் சிவசண்முகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;முதல்வர் மற்றும் வேளாண் அமைச்சர் உத்தரவுப்படி, 'பாசிக்' நிறுவனம் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை தரமாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐப்பசி மற்றும் கார்த்திகை பட்டங்களில் மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் கருதி, தரமான சான்று மற்றும் ஆதார மணிலா விதைகள் அனைத்து உழவரகங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை இன்று (20ம் தேதி) முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழக ஆராய்ச்சி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட, நன்கு மகசூல் தரக்கூடிய தரமான வி.ஆர்.ஐ, 8, 1821, ஜிஜேஜி 31, விதை ரகங்கள் விற்பனைக்கு உள்ளன.வில்லியனுார், அரியூர், கரியமாணிக்கம், மதகடிப்பட்டு, காட்டேரிக்குப்பம், கனகசெட்டிக்குளம் ஆகிய இடங்களில் உள்ள உழவர் உதவியகங்களில் விதை மணிலா வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X