புதுச்சேரி : பள்ளி மைதானத்தில் விளையாட்டு பயிற்சியின்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பயிற்சியாளர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
புதுச்சேரி, சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தாமரைக் கண்ணன்; முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் பள்ளியில் அமைந்துள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில், அங்கு பயிற்சி பெறும் 17 வயது சிறுமி, பயிற்சியாளர் கண்ணன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்குள்ள நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அச்சிறுமி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், தாமரைக்கண்ணன் மற்றும் பயிற்சியாளர்கள் 4 பேர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.