கொரோனாவுக்கு இருவர் பலி | செய்திகள் | Dinamalar
கொரோனாவுக்கு இருவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
05:14

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 55 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதித்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.



புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,217 பேரிடம் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 479 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.தொற்று பாதித்த 94 பேர் மருத்துவமனைகளிலும், 396 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வந்த சாணரபேட்டையை சேர்ந்த 60 வயது முதியவர், வில்லியனுாரை சேர்ந்த 83 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.இதனால் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 1852 ஆக உயர்ந்துள்ளது. .



இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 137 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பாதிப்பு 1.30 சதவீதமாகவும், இறப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 98.16 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் முதல் டோஸ் தடுப்பூசியை 1315 பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 4353 பேரும் செலுத்திக் கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X