இளங்கோ அடிகள் பள்ளியில் என்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம் | செய்திகள் | Dinamalar
இளங்கோ அடிகள் பள்ளியில் என்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
05:24

புதுச்சேரி : முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், தன்னார்வ மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடந்தது.



நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் ரகுபதி வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் பூபதி தலைமை தாங்கி, 'ஆளுமை வளர்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் அரவிந்தன் பேசினார்.என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜன் , நாட்டு நலப் பணித்திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள், விருதுகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கினார்.மாணவர்கள் 'துாய்மை இந்தியா' உறுதி மொழி ஏற்றனர். என்.எஸ்.எஸ்.திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X