உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு விழாக்கோலம் பூண்டது கிராமங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2021
05:55

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்க உள்ளதையொட்டி கிராமப் புறங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.



கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாகி முதன் முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், சின்னசேலம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருநவாலுார், திருக்கோவிலுார், கல்வராயன்மலை ஆகிய 9 ஒன்றியங்களை கொண்டுள்ளது.இதில், 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சி தலைவர்கள், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.தேர்தல் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்று, 9 சேர்மன் பதவிகளையும் தக்க வைத்து கொண்டது.



ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., -145, அ.தி.மு.க.,- 16, சுயேட்சை 10, மற்ற கட்சிகள்-9 என வெற்றி பெற்றது. அதேபோல், 19 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளையும் தி.மு.க., பிடித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவியேற்பு இன்று 20ம் தேதி நடக்கிறது. ஒன்றிய கவுன்சிலர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட கவுன்சிலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்திலும் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.அதேபோல், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளாட்சி பிரநிதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர்.



ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட சேர்மன், துணை சேர்மன் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது.இன்று நடக்கும் பதவியேற்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மட்டுமே மறைமுக தேர்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் இன்று பதவியேற்க உள்ளதால், கிராமப் புறங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X