நாரேரிக்குப்பம் ஏரியில் ஆக்கிரமிப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
நாரேரிக்குப்பம் ஏரியில் ஆக்கிரமிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
06:35

மயிலம் : மயிலம் அடுத்த ரெட்டணை ஊராட்சியில் நாரேரிக்குப்பம் ஏரி 210 ஏக்கர் நிலப் பரப்பளவு கொண்டது.



மழைக்காலங்களில் சங்கராபரணி ஆற்று நீர் கிளை வாய்க்கால் மூலம் ஏரிக்குச் செல்கிறது. ஏரி நிரம்பி உபரி நீர் பிரிந்து 6 கிராம ஏரிகளுக்குச் செல்கிறது.நாரேரிக்குப்பம் ஏரி தண்ணீர் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆற்று கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருப்பதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.



இதனால், ஏரியின் பெரும் பகுதி முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி ஏரி பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேர்க்கடலை, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதுபோன்று ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால்களையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.சில ஆண்டுகளாக இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுபோனது. மேலும் 10 ஆண்டுகளாக ஏரி துார்வாரப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.



எனவே, வடகிழக்குப் பருவ மழை நீரை சேமிக்க உடனடியாக ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார வேண்டும் என, தமிழக முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே, அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X