மருத்துவ உதவியாளர் பயிற்சி பெண்களுக்கு கலெக்டர் வாழ்த்து | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மருத்துவ உதவியாளர் பயிற்சி பெண்களுக்கு கலெக்டர் வாழ்த்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
06:50

கள்ளக்குறிச்சி : தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர் பயிற்சிக்குச் செல்லும் பெண்களை கலெக்டர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.



மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட ஊரக ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியில் மாவட்டம் முழுதும் பங்கேற்ற 827 இளைஞர்களில் கணினி இயக்கப்பயிற்சி, மொபைல்போன் பழுது பார்த்தல், மருத்துவ உதவியாளர், அழகுக்கலை மற்றும் உணவு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளுக்கு, இதுவரை 187 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக மருத்துவ உதவியாளர் பயிற்சி பெறும் 15 பெண்கள் சென்னை சென்றனர். இவர்களை கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பயிற்சி முடிவுற்ற உடன் வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்.ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X