பஸ்ஸ்டாண்டில் குடிநீர் இன்றி பயணிகள் தவிப்பு | தேனி செய்திகள் | Dinamalar
பஸ்ஸ்டாண்டில் குடிநீர் இன்றி பயணிகள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
07:17

போடி : தமிழக - கேரளா பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் போடி பஸ்ஸ்டாண்ட் உள்ளது. போடியிலிருந்து தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் பயணிகள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். பஸ்ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.



ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் ரூபாய் பல லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது. சில நாட்கள் மட்டுமே செயல்பட்டது. அதன்பின் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. குடிநீருக்காக பயணிகள் அருகே உள்ள ஓட்டல்கள், பிளாட்பார கடைகளை நாடி செல்கின்றனர். பயன்பாடின்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X