சங்கராபரணி ஆற்று பாலம் சீரமைக்க நடவடிக்கை தேவை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
சங்கராபரணி ஆற்று பாலம் சீரமைக்க நடவடிக்கை தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
07:54

செஞ்சி : செஞ்சி சங்கராபரணி ஆற்று பாலத்தில் உள்ள பள்ளங்களில் சிக்கி தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.



உயிரிழப்பு ஏற்படும் முன் பள்ளங்களை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செஞ்சி நகரில் மிக முக்கிய சாலையாக திண்டிவனம் சாலை உள்ளது. இந்த சாலையின் துவக்கமாக சங்கராபரணி ஆற்று பாலம் உள்ளது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தின் மேற்பரப்பில் உள்ள சிமென்ட் காரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் முக்கால் அடி வரை பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டி கொண்டுள்ளன.இதில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகளும், கார்களும் விபத்துக்குள்ளாகி வந்தன. மழை பெய்து, தண்ணீர் தேங்கும் போது பள்ளங்கள் இருப்பதே தெரியாமல் பலர் விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர்.



தொடர் மழையால் இந்த நிலைமை மேலும் மோசமாகி விட்டது. சிறிய ரக வாகனங்கள் மட்டும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது லாரி, பஸ் டயர்களையும் கான்கிரீட் கம்பிகள் குத்தி கிழித்து பஞ்சர் ஆக்கி வருகின்றன.வல்லம், மேல்மலையனுார் ஒன்றிய பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உரம், விதைகளை பைக்கில் கொண்டு வரும் போது பள்ளத்தில் விழுந்து பொருட்களும் வீணாகிறது. விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் முன், கவனம் செலுத்தி சங்கராபரணி ஆற்று பாலத்தின் மீது புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X