அட்டைப்பெட்டி விலை, 20 சதவீதம் உயர்வு: தென்னிந்திய உற்பத்தியாளர் சங்கம் முடிவு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
அட்டைப்பெட்டி விலை, 20 சதவீதம் உயர்வு: தென்னிந்திய உற்பத்தியாளர் சங்கம் முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
09:27

அவிநாசி;மூலப்பொருட்கள் விலை உயர்வால், அட்டைப் பெட்டி விலையை, 20 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க, அவசர ஆலோசனைக் கூட்டம், திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. அட்டைப்பெட்டி தொழில் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.


இதில், சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் கதிர்வேல் ஆகியோர் கூறியதாவது:கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 300 அட்டைப்பெட்டி தொழில் நிறுவனங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். காகித உற்பத்திக்கு தேவையான நிலக்கரி விலை உயர்வால், காகிதத்தின் விலை அதிகரித்திருக்கிறது.இதனால், காகிதத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் அட்டைப்பெட்டி உற்பத்தி செலவும் அதிகரித்திருக்கிறது. வங்கியினரும் கடனுதவி செய்ய தயங்குகின்றனர். வாடிக்கையாளர்களும், 90 நாள் இடைவெளியில் தான், அட்டைப் பெட்டிக்கான தொகையை வழங்குகின்றனர்.


ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற பல காரணங்களால், அட்டைப்பெட்டி தொழிலில் ஈடுபடு வோர் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தற்போதைய சூழ்நிலையில், அட்டைப் பெட்டிக்கான விலையை, 20 சதவீதம் உயர்த்த முடிவெடுத்துள்ளோம். வரும் நாட்களில், இந்த விலையில் மாற்றம் ஏற்படலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X