விவசாயியை ஏமாற்றி திருமணம் மோசடி செய்த, 5 பெண்கள் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2021
09:27

அனுப்பர்பாளையம்:ஏற்கனவே திருமணமான பெண்ணை வைத்து, விவசாயியை ஏமாற்றிய ஐந்து பெண்களை போலீசார் கைது செய்தனர்.-குன்னத்துார் அருகேயுள்ள குறிஞ்சி ஊராட்சி நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 34, விவசாயி. அவரின் பெற்றோர் கடந்த ஆறு ஆண்டாக பெண் பார்த்து வந்தனர்.


பெண் அமையவில்லை.இதனால், ஈரோடு மாவட்டம், சிறுவலூரை சேர்ந்த சந்திரன், என்பவரிடம் பெண் பார்க்க சொல்லி உள்ளனர். அவர், திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்து பாளையம் பகுதியில் உள்ள அம்பிகா என்ற பெண் புரோக்கரிடம் ராஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்தார்.அதற்கு அம்பிகா, பெண் பார்த்து தருவதாகவும் புரோக்கர் கமிஷன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரனும் சம்மதித்தார். உடனே, ரீஷா என்ற பெண் இருப்பதாக, அம்பிகா கூறி, ராஜேந்திரனும் பார்த்து, திருமணம் செய்ய முடிவு செய்தார்.அதற்காக, பெண்ணுக்கு தாலி, அரைப்பவுன் கம்மல், கொலுசு, 10 ஆயிரம் ரூபாய்க்கு துணி ஆகியவை எடுத்து கொடுத்துள்ளார். கடந்த, செப்., 24ல், இரு குடும்பத்தினருடன் பச்சாம்பாளையம் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் முடிந்தது.திருமணம் முடிந்ததும் புரோக்கர் கமிஷனாக, 1.30 லட்சம் ரூபாயை அம்பிகா பெற்றுக்கொண்டார். 25ம் தேதி ராஜேந்திரன் வெளியில் சென்றிருந்தபோது, ரீஷா, நகை மற்றும் பணத்துடன் தலைமறைவானார்.


இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், புரோக்கர் அம்பிகாவை தொடர்பு கொண்ட போது உரிய பதில் இல்லை. இதனால், சந்தேகமடைந்த ராஜேந்திரன், அரியலுார் சென்று விசாரித்தார். அதில், ரீஷாவுக்கு ஏற்கனவே ஜெய் ஸ்ரீதர், என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், ரீஷா, 27, புரோக்கர் அம்பிகா, 38, அவரின் உறவினர்கள் வள்ளி, 55, தேவி, 55, தங்கம், 32 ஆகியோர் மீது குன்னத்துார் போலீசில் புகார் செய்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐந்து பெண்களை கைது செய்து, ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X