ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
12:41

விழுப்புரம் : திண்டிவனம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.





விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் அடுத்த கீழ்வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ஸ்ரீமதி, 21; இவர், தனது முதல் பிரசவத்தையொட்டி, தாய் வீடான பாதிராப்புலியூர் கிராமத்திற்கு வந்திருந்தார்.நேற்று காலை 8:00 மணிக்கு மேல், பிரசவத்திற்காக செண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். மாலை 6:45 மணியளவில் ஸ்ரீமதிக்கு, பிரசவ வலி அதிகமானது.



உடன், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆம்புலன்சை சித்தணியைச் சேர்ந்த டிரைவர் கார்த்திகேயன் ஓட்டிச் சென்றார். விளங்கம்பாடி அருகே ஆம்புலன்ஸ் சென்ற போது, ஸ்ரீமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.மருத்துவ உதவியாளர் ஜெனிஷியா, செவிலியர் பிரபா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். பின், தாய் மற்றும் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் செண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X