வயதான தம்பதி தற்கொலை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வயதான தம்பதி தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
13:03


கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே தனிமையில் வசித்து வந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.





விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பெரியபாபு சமுத்திரம் கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் 77; விவசாயி. இவரது மனைவி பொற்கலை 72; இவர்களுக்கு ஜெயா, 50; சரோஜினி, 47; சிவகாமி, 40; ஆகிய 3 மகள்கள், லோகநாதன், 45; என்ற மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.ரங்கநாதன், பொற்கலை சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.



நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் புதுச்சேரியில் வசிக்கும் தனது மகன் லோகநாதன் மற்றும் பேரக்குழந்தையிடம் மொபைல் போன் மூலம் இருவரும் பேசி நலம் விசாரித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை 7:30 மணிக்கு பால்காரர் நீண்டநேரம் கூப்பிட்டும் எழுந்து வராததால் அக்கம், பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது, ரங்கநாதன், பொற்கலை இறந்து கிடந்தது தெரியவந்தது.



கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.மேலும், ரங்கநாதன் மகன் லோகநாதன், அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து தம்பதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X