சென்னை ‛அம்மா' உணவகங்களில் சப்பாத்தி இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 அக்
2021
10:04
பதிவு செய்த நாள்
அக் 20,2021 14:47

சென்னை : சென்னையில் உள்ள, 'அம்மா' உணவகங்களில், இரவில் சப்பாத்திக்கு பதில் சாம்பார் சாதம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மண்டல வாரியாக உணவு பொருட்கள் இருப்பு குறித்து, மாநகராட்சி அறிக்கை கேட்டு உள்ளது.


சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் காலையில், 1 ரூபாய்க்கு இட்லி, மதியம் 5 ரூபாய்க்கு கலவை சாதங்கள், இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி விற்பனை செய்யப்படுகின்றன. மூன்று வேளையும் குறைந்த விலையில் உணவுகள் கிடைப்பதால், ஏழை, எளியோர் மற்றும் கூலி தொழிலாளர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் இதை நம்பியே உள்ளனர்.


கொரோனா ஊரடங்கின் போது, பலருக்கு அட்சய பாத்திரமாகவே, அம்மா உணவகம் விளங்கியது. அம்மா உணவகத்தால் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால், உணவு பொருட்கள் வழங்கும் கூட்டுறவு சங்கத்துக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான அம்மா உணவகங்களுக்கு முறையான உணவு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில், சென்னையில் உள்ள சில அம்மா உணவகங்களில், கோதுமை மாவு இருப்பு இல்லாததால், சப்பாத்திக்கு பதில் இரவில் சாம்பார் சாதம் விற்பனை செய்யப்பட்டது. மேலும், அனைத்து அம்மா உணவகங்களிலும் இரவில் சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.




இது குறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில உணவகங்களில் கோதுமை மாவு இல்லாததால் இரவில் சாம்பார் சாதம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உணவகங்களில் சப்பாத்தி விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகம் தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. தற்போது புகார் எழுந்துள்ள நிலையில், உணவு பொருட்கள் பற்றாக்குறை உள்ளதா? என, அந்தந்த மண்டல அதிகாரிகளிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், அனைத்து அம்மா உணவகங்களிலும், மூன்று வேளை உணவுகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
21-அக்-202106:54:32 IST Report Abuse
 N.Purushothaman இன்னும் கொஞ்ச நாள்ல அம்மா உணவகம் இருக்காது ....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-அக்-202101:20:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஏன் வாயிலே நொழையாத இந்தி பேரு வெக்க போறீங்களா ??...
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
20-அக்-202122:42:45 IST Report Abuse
Tamilnesan ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு சாப்பிடும் ஒவொவுருவருக்கும் ருபாய் ஆயிரம் வரி விதிக்கப்பட்டு அந்த பணம் அம்மா உணவகத்தில் கொடுத்து ஏழைகளுக்கு குறைந்த விலையில் தினமும் உணவு வழங்கப்பட வேண்டும். இப்படி அரசு உத்தரவிட வேண்டும். இந்த அரசு உண்மையிலே ஏழைகள் மீது அக்கறை கொண்டிருந்தாள் இப்படி உத்தரவிட வேண்டும்.
Rate this:
Cancel
SadaIndian - Chennai,இந்தியா
20-அக்-202122:31:07 IST Report Abuse
SadaIndian அப்புசாமி சார்....தமிழ்நாட்டில் ஓசி என்ற எதிர்பார்ப்பை நாம்தான் ஒழிக்க வேண்டும். அரசியல் வைரஸ் கோவிடுடுன் மோசமானவை. அதற்கு வைத்தியம் வாக்சின் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X