நூல் விலை உயர்வை கண்டித்து பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் : தினமும் ரூ. 2 கோடி உற்பத்தி இழப்பு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
நூல் விலை உயர்வை கண்டித்து பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் : தினமும் ரூ. 2 கோடி உற்பத்தி இழப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
23:15

சத்திரப்பட்டி:ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நுால் விலை ஏற்றத்தை கண்டித்து பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.



விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள், மருத்துவ துணி உற்பத்தி ஆலைகள், சைசிங் உள்ளிட்ட உப தொழில்களில் ஆண்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இங்கு உற்பத்தியாகும் பேண்டேஜ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மூலப்பொருளான நுால் விலை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 14,500 ஆக உயர்ந்துள்ளது. லாரி வாடகையும் உயர்ந்துள்ளது.



தொடர் விலை உயர்வால் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை சப்ளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து 4 நாட்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செந்தில் ராஜ்: வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஆதரவாக சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.நுால் விலையை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X