நகராட்சியில் லாரி இல்லாததால் சீரான குடிநீர் விநியோகம் இல்லை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
நகராட்சியில் லாரி இல்லாததால் சீரான குடிநீர் விநியோகம் இல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
03:30

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் லாரி பழுதாகியுள்ளதால், வாடகை லாரி மூலம் பெயரளவில் குடிநீர் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.



ராமநாதபுரம் நகராட்சியிலுள்ள குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் மூலம் வழங்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.இந்த நிலையில் ஒரு லாரி மட்டும் உள்ளதால் அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் குடிநீர் வழங்குவது இல்லை, காலதாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.



தற்போது அந்த லாரியும் பழுதாகியுள்ளதால் தனியார் லாரி மூலம் பெயரளவில் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சிக்கு கூடுதலாக லாரி வாங்கவும், தொய்வின்றி அரசு அலுவலகங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு நகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி கமிஷனர் (பொ) நீலேஸ்வரர் கூறுகையில்,லாரி எப்.சி., வேலைக்கு சென்றுள்ளது. வாடகை லாரி மூலம் தொய்வு இல்லாமல் அனைவருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'என்றார்.--

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X