விருதுநகர் : ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
இந்தாண்டு விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயில், பேச்சி அம்மன் கோயில், திருச்சுழி பூமிநாதர் கோயில், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில், காரியாபட்டி முடுக்கன் குளம் ஆதிசிவன் கோயில், சாத்துார் விஸ்வநாதர் கோயில், ராஜபாளையம் சத்திரப்பட்டி தண்டாயுதபாணி கோயில் சொக்கர் சன்னதி, மாயூரநாதர் சுவாமி, சொக்கர், அண்ணாமலையார் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார்: மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் காலை 7:30 மணி முதல் மூலவருக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தது. அன்னாபிஷேக வழிபாட்டை அர்ச்சகர் ரகு பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவஹர் செய்திருந்தார்.