ரத்தாகுமா?: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள்...அரசியல் கட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
05:52

புதுச்சேரியில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.



தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகையின் போது தொகுதி மக்களுக்கு அரசியல் கட்சியினர் அன்பளிப்பு வழங்குவது வழக்கம்.உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்ததால், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு தொகுதி மக்களுக்கு சேலை, வேட்டி, இனிப்பு, பட்டாசு மற்றும் பாத்திரங்கள் வழங்க மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.



இந்நிலையில், கடந்த 22ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.அதன்பேரில் தேர்தல் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கி, கடந்த 8ம் தேதி மீண்டும் தேர்தலை அறிவித்தது.இதனை கண்டித்து எதிர்கட்சி தலைவர் சிவா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, அக். 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.



மேலும், 21ம் தேதி வரை தேர்தல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். அதனால், தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் மட்டும் அமலில் உள்ளது.இதுதொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து, நடத்தை விதிகளை திரும்ப பெற வலியுறுத்தினர்.அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையர், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெற முடியாது என அறிவித்தார்.இதனால், அரசு சார்பில் தீபாவளி பண்டிகைக்கு ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை, சர்க்கரை, ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசியல் கட்சியினர், தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.இது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசையை சந்தித்து இருமுறை ஆலோசனை நடத்தினார். அதில், உள்ளாட்சி தேர்தலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுடன் நடத்திட உரிய கால அவகாசம் கேட்க முடிவு செய்யப் பட்டது.இதுதொடர்பாக நேற்று மதியம் முதல்வர் ரங்கசாமி மீண்டும் கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.



அதனையொட்டி, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது, அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்திட கால அவகாசம் கேட்கப்பட உள்ளது.மேலும், தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தப்பட உள்ளது.இதனால், தேர்தல் நடத்தை விதிகள் இன்றோடு ரத்தாகுமா என அனைத்து கட்சி பிரமுகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X