ஏ.டி.எம்., மையத்தில் நுாதன கொள்ளை முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
06:35

கொளத்துார்--ஏ.டி.எம்., மையத்தின் கண்காணிப்பு கேமராக்களில், 'இன்சுலேஷன் டேப்' ஒட்டி, இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவர் கைதானார்.சென்னை கொளத்துார், ஸ்ரீநகர் காலனி மேற்கு தெரு சந்திப்பில், கனரா வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. அதில், நேற்று அதிகாலை 1:00 மணியளவில், சந்தேகத்திற்கிடமாக ஆள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு, கொளத்துார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார், அருகில் சென்றனர்.அவர்களைக் கண்டதும், மர்ம நபர் வெளியேறி தப்பிக்க முயன்றார். போலீசார் விரட்டிச் சென்று, ராமதாஸ் தெருவில் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் கொளத்துார் வினாயகபுரம், வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ், 21, என தெரிந்தது.அவர், ஏ.டி.எம்., மையத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களை, 'இன்சுலேஷன் டேப்' ஒட்டி மறைத்து, கடப்பாறையால் இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது. கேமராக்களுக்கு 'டேப்' ஒட்டிய நிலையில் அவர் சிக்கினார். இதனால், ஏ.டி.எம்., இயந்திரமும், அதிலிருந்த பணமும் தப்பியது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 அடி நீள கடப்பாறை, 'ஆக்சா பிளேடு' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X