விவசாய நிலத்தில் வேண்டாம் தொழிற்பேட்டை! 40 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
06:46

அன்னுார் : தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி, 40 கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, பொகலுார், வடக்கலுார் ஆகிய நான்கு ஊராட்சிகளிலும், மேட்டுப்பாளையம் தாலுகாவில், பள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் என ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க 'டிட்கோ', அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.இதற்கான பணியில் டிட்கோ அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் நில அளவைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர், இதற்கு, ஆறு ஊராட்சியை சேர்ந்த, 40 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



40 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நேற்று, அன்னுார் தாலுகா அலுவலகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வேணுகோபால் பேசுகையில், ''இப்பகுதியில் பல தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கோழி பண்ணை, விவசாயம் ஆகிவற்றை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, இப்பகுதியில் உள்ள 40 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் அழியும். நிலத்தடி நீர், காற்று மாசடையும். எனவே, இங்கு தொழிற்பேட்டை அமைக்க கூடாது,'' என்றார்.



கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் குமார ரவிக்குமார் பேசுகையில், ''பெருந்துறை சிப்காட்டால், 30 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர், காற்று மாசுபட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. நிலத்தின் விலையும் அதிகமாக உள்ளது. இங்கு எதற்கு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். தொழிற்சாலைகள் குறைவாகவும், நிலத்தின் விலை குறைவாகவும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இடத்தில், தொழிற்பேட்டை அமைப்பது தான் பொருத்தமானது. எங்கள் உயிர் போனாலும் இங்கு விவசாய நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.



அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி பேசுகையில், ''தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்து, விவசாயிகள், பொது மக்களுடன் அ.தி.மு.க., இணைந்து போராடும்,'' என்றார்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் பேசுகையில், ''விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை அரசு கைவிடாவிட்டால், அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.



அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் பேசுகையில், ''நான்கு நாட்களுக்குள் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக, தமிழக அரசு அறிவிக்காவிட்டால், அடுத்த கட்டமாக தீவிர போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதை கைவிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறும் நேரத்தில் தொழிற்பேட்டை அமைப்பது விவசாயத்தை அழிக்கும். மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகளின் ஒப்புதல் பெற்ற பிறகே நிலங்களை கையெழுத்து பெற்று கையகப்படுத்த வேண்டும் என்னும் விதி இருக்கிறது. ஆனால் விவசாயிகளிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம், என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



விவசாயிகள், தாசில்தாரிடம் மனு அளித்தனர். தாசில்தார் ரத்தினம் மனுவை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.அ.தி.மு.க., - பா.ஜ., பல்வேறு விவசாய அமைப்புகள், அத்திக்கடவு ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதனால் சத்தி சாலையில் செல்லும் வாகனங்கள், ஓதிமலை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X