சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம் | கடலூர் செய்திகள் | Dinamalar
சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
06:47

விருத்தாசலம்-ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, விருத்தாசலம் சிவன் கோவில்களில் சுவாமி அன்னாபிேஷக அலங்காரத்தில் அருள்பாலித்தார்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 3:30 மணியளவில், மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையுடன் அன்னம், காய்கறி, பழங்கள் சாற்றுதல் துவங்கியது. மாலை 6:30 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏகநாயகர் கோவிலில் காலை 9:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 6:30 மணியளவில் அன்னாபிேஷக அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணியளவில் அன்னலிங்கம் கோவிலை வலம் வந்து, நீரில் கரைக்கும் நிகழ்ச்சியுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரம் முத்து திருநாவுக்கரசு ஓதுவார், பழவைத்தியநாதன் ஓதுவாரின் திருநெறி தெய்வத்தமிழிசை நிகழ்ச்சி நடந்தது.இதேபோல், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், மாம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில்களில் அன்னாபிேஷகம் நடந்தது.கடலுார்கடலுார் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கடலுார் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் உள்ள சுந்தரரேஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. சுவாமி மீது சாற்றப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆல்பேட்டை வெட்ட வெளி சித்தர் பீடத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X