பாயுமா! விதி மீறும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை...மாவட்டத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
06:49

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்தில் விதி மீறும் பட்டாசு கடைகளை கண்காணிப்பதுடன், கள்ளச்சந்தையில் விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தீபாவளி பண்டிகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது வழக்கம். அப்போது, பட்டாசுகளின் விபரீதம் புரியாத சிறுவர்கள் சிலர், முன்னெச்சரிக்கை இல்லாமல் தீ விபத்தில் சிக்கி காயமடைவது வழக்கம். இதற்காக, அந்தந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பள்ளிகள், பொது மக்கள் கூடுமிடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.



மேலும், பட்டாசு தொழிற்கூடம், உரிமம் பெற்ற மற்றும் உரிமம் கோறும் பட்டாசு கடைகளில் வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் போலீசார் என தடையில்லா சான்று தரும் அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்வர். அப்போது, இருபுற வழிகள், புதுப்பிக்கப்பட்ட ஒயர்கள், மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டி போன்ற தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மேலும், சிகரெட், பீடி போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை உபயோகிக்க கூடாது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கடைகளுக்கு முன் பொருத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் சேமிப்பு குடோன்கள், பட்டாசு கடைகளில் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால், புதிதாக உரிமம் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.பட்டாசு கடைக்கு உரிமம் பெறாமல் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் ஆகியன வெடிமருந்துச் சட்டம் 1884-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம். ஆனால், ஆண்டுதோறும் விதிமுறைகளை மீறி புற்றீசல்போல பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன.எனவே, விபத்தில்லா தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உரிமம் பெறாமல் பட்டாசுகள் விற்பனை செய்வோர், சேமித்து வைப்போரை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.பி., கவனிப்பாராஅரசு நிர்ணயித்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், குறுக்கு வழியில் சிலர் உரிமம் பெறுவது வாடிக்கையாகி விட்டது. இவர்கள், பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன், அவசர கதியில் அதிகாரிகளை கவனித்து உரிமம் பெற்று விடுகின்றனர்.



இதுபோன்ற குறைபாடுகளை தனிப்பிரிவு, உளவுப்பிரிவு அதிகாரிகள் மூலம் கண்காணித்து எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளச்சந்தை அதிகரிப்புஉரிமம் பெறாத நபர்கள், கள்ளச்சந்தையில் பட்டாசுகளை வாங்கி வந்து, கிப்ட் பாக்ஸ் என்ற பெயரில், பெட்டி கடைகள், சாலையோரம் விற்பனை செய்கின்றனர். மேலும், பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் தள்ளுவண்டிகளில் ஆபத்தை உணராமல் பட்டாசுகளை விற்பதால் சிறுவர்கள், பாதசாரிகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. இவை, தீபாவளிக்கு முந்தைய நாளில் அதிகமாக இருக்கும் என்பதால், அவற்றை கண்காணித்து பெரும் விபத்தை தடுக்க வேண்டும்.


- நமது நிருபர் -


 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X