சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்... நீச்சல் அடிக்க வேண்டுமா? அரசு மருத்துவமனையில் அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 அக்
2021
08:55
பதிவு செய்த நாள்
அக் 21,2021 06:50

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் மழைநீர் குளம் போல் தேங்குவதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு மழைக்கும் இந்த பிரச்னையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது நன்கு தெரிந்தும், வேடிக்கை பார்க்கிறது மருத்துவமனை நிர்வாகம்.



கோவை அரசு மருத்துவமனையில், 50க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நோயாளிகளின் வசதிக்காக நடப்பாண்டில் மட்டும், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவி, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு குழந்தைகள் கவனிப்பு பிரிவு, கொரோனா வார்டில் கூடுதல் சி.சி.டி.வி.,கேமராக்கள், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜனுடன் கூடிய சிறப்பு பிரிவு தவிர, பல லட்சம் ரூபாய் மதிப்பில் இருதயம், புற்றுநோய் உள்ளிட்ட பிரிவுகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் கைங்கர்யத்தால், சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.



இதனால்தான் கோவை மட்டுமல்லாமல், கேரளா, திருப்பூர், பொள்ளாச்சி உட்பட சுற்றுவட்டார மக்கள் அனைவரும் உயர்தர சிகிச்சை பெற, ஏழை மக்கள் கோவை அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்.மருத்துவ வசதிகள் சிறப்பாக இருந்தும், உள்கட்டமைப்பு இன்னும் மோசமாகவே உள்ளது. மழைநீர் வடிகால்களை முறையாக அமைக்கவில்லை. ரோட்டில் செல்லும் மழை நீர் முழுவதும், வளாகத்துக்குள் வந்து தேங்கி விடுகிறது.



நேற்று பெய்த மழையால், மருத்துவமனை வளாகம் முழுவதும், சாக்கடையுடன் மழை நீர் கலந்து குளம்போல் தேங்கி நின்றதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அவசர சிகிச்சைக்காக வந்தவர்கள் உள்ளே நுழைய முடியாமல் தடுமாறினர்.ஆம்புலன்சில் வந்த நோயாளிகளை, இறக்கி விட முடியாமல் ஓட்டுனர்கள் தவித்தனர். கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள், முதியவர்களின் நிலை குறித்து சொல்லவே வேண்டாம்.



கை, கால்களில் அறுவை சிகிச்சை செய்து, வீட்டில் இருந்து விட்டு கட்டு பிரிக்க வந்தவர்களின் நிலைதான் பரிதாபம். உள்நோயாளிகளின் உறவினர்களால், மருந்து வாங்கவும், டீ, உணவு வாங்கவும் மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியாமல் போனது. நோயாளிகளை காண வந்தவர்கள், உள்ளே நுழையும் வழி புரியாமல் திகைத்துப்போய் நின்றனர்.



மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''வெளியில் இருந்துதான் அதிகளவில் மழைநீர் உள்ளே வருகிறது. எனினும், மழைநீர் தேங்கினால் உடனுக்குடன், மோட்டார் வைத்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. மழைநீர் உள்ளே வராமல் தடுக்க, நுழைவாயிலின் முன்பு, சாக்கடை கால்வாயை உயர்த்தி கட்டவும், வேகத்தடை அமைக்கவும் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்,'' என்றார் சர்வசாதாரணமாக.



மழை நீரை உறிஞ்சும் வரை, அவசர சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளால் உயிரை கையில் பிடித்தபடி நிற்க முடியாது என்பது, சிறு குழந்தைக்கு கூட தெரியும்.பருவமழை வந்தால் ஒவ்வொரு முறையும், மருத்துவமனை வளாகம் இப்படித்தான் கழிவு நீரால் நிறைந்து விடுகிறது. இது குறித்து முன்னரே தெரிந்தும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வழிமுறைகளை, முன்னரே கண்டறிய தவறியது, நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. நல்ல வேளை... இந்த நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை வரவில்லை!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202110:23:52 IST Report Abuse
அப்புசாமி ஹி.ஹி... மழைநீர் சேகரிப்பு நடக்குது. சீக்கிரமே படகுச் சவாரிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X