எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் எட்டு மரங்களுக்கு வெட்டு! சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் எட்டு மரங்களுக்கு வெட்டு! சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

21 அக்
2021
09:00
பதிவு செய்த நாள்
அக் 21,2021 06:57

கோவில்பாளையம் : எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் எட்டு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது, சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சத்தி பிரதான சாலையில், பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அமைந்துள்ளது. இங்கு, 2 கோடியே, 10 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அலுவலக வளாகத்திலும், வளாகத்துக்கு வெளியே சாலையிலும் உள்ள புங்கன் மற்றும் மே பிளவர் உட்பட எட்டு மரங்கள் நேற்று வெட்டி சாய்க்கப்பட்டன.இதை கண்ட சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்து, ஒன்றிய அலுவலகத்தில் கேட்டபோது புதிய அலுவலகத்துக்கு மின் கம்பம் மற்றும் மின்சார ஒயர்கள் செல்வதற்கு இடையூறாக இருப்பதால் வெட்டியதாக கூறி உள்ளனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அரசு, மரம் வளர்ப்பதற்காக சிறப்பு நிதி ஒதுக்கி, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை மரக்கன்று நடுதல், பராமரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்தும்படி கூறுகிறது.நீதிமன்றம் ஒரு மரம் வெட்டப்பட்டால், 10 மரங்கள் நட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதையும் மீறி, இங்கு எட்டு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. ஒன்றிய அலுவலகத்திற்கு இடையூறாக உள்ள இரண்டு அல்லது மூன்று மரங்களின் பக்கவாட்டுக் கிளைகளை மட்டும் அகற்றி இருந்தால் போதுமானதாகும்.ஆனால், அதிகாரிகள் அலட்சியமாக, எட்டு மரங்களை வெட்டி அகற்றி விட்டனர். வெட்டப்பட்ட மரங்கள் குறித்து டெண்டர் கோரப்பட்டதா, அதிக தொகை கேட்டவர்களுக்குதான் மரங்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதா என்கிற விபரமும் தெரியவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா கூறுகையில், ''ஒன்றிய அலுவலகத்தில், மின்கம்பங்கள் புதிதாக அமைக்கவும், மின் ஒயர்கள் கொண்டு செல்லவும், மரங்கள் இடையூறாக இருப்பதால், ஆர்.டி.ஓ.,விடம் 11 மரங்களை வெட்டி அகற்ற அனுமதி பெற்று உள்ளோம்,'' என்றார்.ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் கூறுகையில், ''அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரினர். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.மரம் நடுவது, பராமரிப்பு குறித்து, மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தினாலும், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியமாக, மரங்களை வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X