உங்க ஏரியாவில் காய்ச்சல் பாதிப்பா...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
07:15

கோவை : பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு, மாவட்ட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.



கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் தண்ணீர் போல் தேங்கியுள்ளது.இதன் காரணமாக, பலரும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவர். சுத்தமில்லாத உணவு மற்றும் தண்ணீரை பருகுவதால், வயிற்றுப்போக்கு தொந்தரவும் ஏற்படுகிறது.எனவே, இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு தண்ணீர் தொட்டிகளை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம். தங்கள் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.



மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில்,''மழைக்கால தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும், 12 மருத்துவ அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.இக்குழுவினர், எந்தெந்த பகுதிகளில் அதிகளவில் வயிற்றுப்போக்கு, மலேரியா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது என ஆய்வு செய்வர். நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்.



பள்ளிகளில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைக்கென, 24 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள், தங்கள் குடியிருக்கும் பகுதிகளில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனே மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு, 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X