முன்னே மாதிரி இல்லீங்க... திராட்சை விவசாயம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
07:16

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன், சுமார், 3,000 ஏக்கர் பரப்பளவில், திராட்சை விவசாயம் நடந்து வந்தது.



தற்போது, திடீர் பருவநிலை மாற்றம், போதிய விலை இல்லாத காரணங்களால், பலரும் திராட்சை விவசாயத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.தற்போது, 150 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே திராட்சை விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு கிலோ பன்னீர் திராட்சை, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனமழையின் காரணமாக, திராட்சை பழங்கள் வெடித்தும், பூ மற்றும் பிஞ்சு அழுகியுள்ளதாலும், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.



மாவட்ட திராட்சை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விஜயன் கூறுகையில், "கோவையில், 150 ஏக்கர் பரப்பளவில் திராட்சை விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. முதன்முறை திராட்சை பயிரிடும் விவசாயிகள், நிலம் தயார்படுத்தி, கால்கள் நட்டு, வேலிகள் அமைக்க, ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஒரு ஏக்கருக்கு திராட்சை சாகுபடி செய்ய, 2 லட்சம் வரை செலவாகிறது.



சில ஆண்டுகளாகவே, வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் கேரளா வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளது. திராட்சை விவசாய பரப்பளவு குறைவாக உள்ளதால், விவசாயிகள் வியாபாரிகளை தேடிச்செல்லும் நிலை உள்ளது.இதனால், வியாபாரிகள் நிர்ணயிப்பதே விலையாக உள்ளது. பருவம் தவறி மழை பெய்து வருவதால், திராட்சை அழுகி வருகிறது. விளைச்சல் வெகுவாக பாதித்துள்ளது," என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X