நகராட்சியில் 'தனித்தீவு'; குடியிருப்போர் கவலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
நகராட்சியில் 'தனித்தீவு'; குடியிருப்போர் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
07:23

பல்லடம் நகராட்சி, மங்கலம் ரோடு டி.எம்.எஸ்., நகரில், ஏராளமான குடியிருப்புகள், மற்றும் கடைகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மிகவும் சிறியதாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் வீதி முழுவதும் தண்ணீர் தேங்கி நின்று, அவதிப்பட்டு வருவதாக குடியிருப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:சிறிய மழைக்கும் தண்ணீர் நிறைந்து, கழிவு நீருடன் மழைநீர் கலந்து, வீதி முழுவதும் சூழ்ந்து விடுகிறது. தாழ்வான பகுதியில் வீதி உள்ளதால், ரோட்டிலிருந்து வரும் தண்ணீரும் வீதிக்குள் புகுந்து விடுகிறது.தேங்கி நிற்கும் தண்ணீர் வடிந்து செல்ல பல மணி நேரங்கள் ஆகின்றன. கழிவு நீருடன் மழைநீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும், அவசர பணிக்கு வெளியே செல்ல இயலாத நிலை உள்ளது. எனவே, மழைநீர் வடிகாலை விரிவுபடுத்தி, வீதிக்குள் தண்ணீர் தேங்காத வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X