இயங்குமா? ஒருங்கிணைந்த புலனாய்வு பிரிவுகள் தனித்து...கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் எதிர்பார்ப்பு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
இயங்குமா? ஒருங்கிணைந்த புலனாய்வு பிரிவுகள் தனித்து...கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் எதிர்பார்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
08:02

கள்ளக்குறிச்சி-ஒருங்கிணைந்து செயல்படும் காவல் துறையின் புலனாய்வு பிரிவுகள் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயங்கி வருகிறது. வருவாய்த் துறை, கல்வித் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற பல்வேறு அரசு துறைகள் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. அதேபோல், காவல் துறையும் பிரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், 3 அனைத்து மகளிர் காவல் நிலையம், 3 போக்குவரத்து காவல் நிலையம், 3 மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களைக் கொண்டுள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லுாரியில் தற்காலிகமாக எஸ்.பி., அலுவலகம் இயங்குகிறது. எஸ்.பி., கட்டுபாட்டில் இயங்கக் கூடிய மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், தொழில் நுட்ப பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகள் செயல்படுகிறது. இந்நிலையில், உளவுத் துறை (எஸ்.பி.சி.ஐ.டி.,), ஒழுங்கமைப்பட்ட குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு (ஓ.சி.ஐ.யூ.,), சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.யூ.,), கியூ பிரிவு, குற்றம் மற்றும் குற்ற புலனாய்வு துறை (சி.பி.சி.ஐ.டி.,), குற்ற தடுப்பு பிரிவு(சி.ஐ.யூ.,), போதை பொருள் நுண்ணறிவு பிரிவு (என்.ஐ.பி.,), காவல் துறையின் பல்வேறு புலனாய்வு பிரிவுகள் தற்போதும் விழுப்புரம் மாவட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.அதேபோல், உணவு பாதுகாப்பு போலீஸ் பிரிவு, லஞ்ச ஒழிப்பு துறையும் இதுவரை பிரிக்கப்படாமல் விழுப்புரத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் ரகசிய புகார் அளிக்க வேண்டுமெனில், விழுப்புரம் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.



இத்துறைகள் மற்றும் பிரிவுக்கான காவல் துறை உயர் அதிகாரிகள் ஆங்காங்கே விழுப்புரத்தில் உள்ள அலுவலகத்திலிருந்து செயல்படுத்தி வருகின்றனர். இப்பிரிவுகளில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் பலர் பல்வேறு அலுவல் பணிகளுக்காக அவ்வப்போது விழுப்புரத்திற்கு சென்று வருகின்றனர்.இதனால், இப்பிரிவில் பணிபுரியும் போலீசார் பலர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, புலனாய்வு பிரிவுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்டு தலைமையிடமாக கொண்டு இயங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X