கொரோனா மையமாக பள்ளி மாணவியர் விடுதி; தொற்று பரவும் அபாயத்தால் பெற்றோர் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
10:09

கோபி: கோபி தனியார் மேல்நிலைப்பள்ளியின் மாணவியர் விடுதி, கொரோனா மையமாக செயல்படுவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம், கோபியில், தனியார் நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, மாணவியர் தங்கும் விடுதி வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரை மொத்தம் 700 மாணவியர் பயில்கின்றனர். இதே பள்ளி வளாகத்தில் இயங்கும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, மொத்தம், 450 மாணவியர்கள் பயில்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதி, வருவாய்த்துறை ஏற்பாட்டில், கடந்த 1ம் தேதி முதல், கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது. அங்குள்ள 48 விடுதி அறையில், நேற்றைய நிலவரப்படி, 40 கொரோனா நோயாளிகள் 24 மணி நேரமும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதி முழுக்க, தகரம் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல், இப்பள்ளிக்கு ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவியர் வரவுள்ளனர். குறிப்பாக, துவக்க வகுப்புகளை சேர்ந்த பிஞ்சு மழலைகள், வகுப்பறைக்குள் காலடி வைக்க உள்ளனர். இச்சூழலில் பள்ளி வளாகத்தில், கொரோனா மையம் இயங்குவதால், குழந்தைகளுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என பெற்றோர் மத்தியில் ஒருவித அச்சத்தை கிளப்பியுள்ளது. ஏனெனில், தகரம் கொண்டு தடுப்பு அமைந்துள்ள பகுதியில், கழிப்பிடம் மற்றும் கைகழுவும் பகுதிக்கு குழந்தைகள் செல்ல வேண்டியுள்ளது. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, போர்க்கால அடிப்படையில், கொரோனா மையத்தை உடனே இடமாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ., பழனிதேவி கூறுகையில், ''இது குறித்து எங்களுக்கும் தகவல் வந்துள்ளது. எனவே இப்பிரச்னை குறித்து, ஈரோடு கலெக்டரின் கவனத்துக்கு, தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X